நிலவின் காதலி
அடைய முடியாத காதல் நீ..
தெரிந்தே ரசிக்கின்ற உள்ளம் நான்...
வளர்ந்து தேய்ந்து, தெரிந்து மறைந்து
எனை வாட்டி வதைக்கின்றாய்!!
அள்ளி அணைக்க அருகில் வந்தால்,
முகிலில் மறைகின்றாய்!!
ஆள நினைக்கவில்லை என் அன்பு
உனை காண நேர்தலே என் இன்பம்
என் கதை உனக்குத் தெரியும்!
என் கதை, உனக்கு மட்டுமே தெரியும்!!!
இருளில் நான் தவிக்கையில் ஒளி தருவாய்..
மலர்ந்து நான் சிரிக்கையில் குறுநகை புரிவாய்!!
உன் நிறை மட்டுமல்ல கறைகளையும் தான் காதலிக்கிறேன்!!
நீ எனை பார்க்கும் போதெல்லாம் நானும் உனை பார்க்கின்றேன் - நான் இருப்பது உனக்கு தெரியும், நீ இருப்பதும் எனக்குத் தெரியும்
இப்படிக்கு,
நிலவின் ஒளியில் நான்😇🌔
Comments
Post a Comment